போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தமிழகத்தில் 2 மாதங்களில் 470 பேர் கைது

போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தமிழகத்தில் 2 மாதங்களில் 470 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தில் கடந்த 2 மாதங் களில் 470 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். தமிழகத்தில் போதை பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில், போதை பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். அதேபோல் போதை பொருளினால் ஏற்படும் தீங்கு குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், போதை பொருள்களை தொடர்ந்து கடத்தி வருபவர்கள், பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துகளை பறிமுதல் செய்யவும், வங்கி கணக்குகளை முடக்கவும் நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழக காவல் துறையின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் விற்பனை தொடர்பாக 470 பேரைக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 1,914 கிலோ கஞ்சா, 3,321 போதைமாத்திரைகள், 2 கிலோ மெத்தம் பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போதை பொருள் விற்பனை, கடத்தலுக்குப் பயன்படுத்திய 21இருசக்கர வாகனங்கள், 6 இலகுரகவாகனங்கள், ஒரு ஆட்டோ ஆகிய வையும் கைப்பற்றப்பட்டுள்ளன. போதை பொருள் வழக்குகளில் தொடர்புடையவர்களின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 25 பேருக்கு நீதிமன்றம் மூலம் காவல்துறை தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்த நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும்போதை பொருள் நுண்ணறிவு பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in