Published : 05 Mar 2024 05:19 AM
Last Updated : 05 Mar 2024 05:19 AM

திமுக நிர்வாகி கொலை வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 4 பேர் சரண்

ஸ்ரீவில்லிபுத்தூர்: செங்கல்பட்டு மாவட்டம்,வண்டலூர் பகுதியைச் சேர்ந்ததிமுக நிர்வாகி ஆராமுதன் (55),கடந்த 29-ம் தேதி இரவு மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில், 5 பேர் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் கடந்த 1-ம் தேதி சரணடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தகனகராஜ் (31), வண்டலூரைச் சேர்ந்த அருண்ராஜ் (31), அவினாஞ்சேரியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (21), மணிகண்டன் (20) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நேற்று சரண டைந்தனர்.

அவர்கள் 4 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கநீதிபதி ராஜேஷ் கண்ணா உத்தரவிட்டார். 4 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x