

மதுரை: சென்னையிலிருந்து வந்தபொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3நாட்களுக்கு முன்பு ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதைப்பொருள் கடத்தி வந்த பிள்ளமண்ட் பிரகாஷ்என்பவரை மதுரை ரயில் நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (டிஆர்ஐ) பிடித்தனர்.
பின்னர், அவர் வைத்திருந்த 2 பைகளில் இருந்து 30 கிலோபோதை பொருட்களை பறிமுதல்செய்தனர். பிள்ளமண்ட் பிரகாஷ்கைது செய்யப்பட்டார். அவர்அளித்த தகவலின்பேரில், சென்னையிலுள்ள அவருடைய வீட்டிலிருந்து 6 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்யப்பட்டது இதைத் தொடர்ந்து, பிள்ளமண்ட் பிரகாஷின்மனைவி மோனிஷா ஷீலா கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்குஉதவியாக இருந்த சென்னையை சேர்ந்த யேசுதாஸ் (40) என்பவரையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பிடித்தனர்.
அதன்பின்னர், இருவரையும் மதுரைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மோனிஷாஷீலா, தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்ததாகவும், கணவரின் போதை பொருள் கடத்தலுக்கு மோனிஷா மற்றும் யேசுதாஸ் ஆகியோர் உதவி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட மோனிஷா ஷீலா மற்றும்யேசுதாசை, மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நேற்று காலை நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பாக ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள்நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில், இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.