Published : 03 Mar 2024 04:12 AM
Last Updated : 03 Mar 2024 04:12 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த பட்டிவீரன்பட்டியில் பாஜக நிர்வாகி தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்லை அடுத்த பட்டி வீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மணி கண்டன் ( 35 ). இவர் வத்தலகுண்டுவில் மொபைல் போன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சிவதர்ஷினி ( 29 ). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், அங்கு சென்ற பட்டிவீரன்பட்டி போலீஸார், இருவரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு மணிகண்டன் தனது 2 குழந்தைகளையும், கடையில் வேலை செய்யும் நபர் மூலம், ஈரோட்டில் உள்ள தனது மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிய வந்தது. கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT