Published : 02 Mar 2024 05:15 AM
Last Updated : 02 Mar 2024 05:15 AM

வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.7.56 கோடி மோசடி: 2 பேர் மீது வழக்கு பதிவு

கோப்புப் படம்

சிவகாசி: சிவகாசியில் போலி நகைகளை வங்கியில் அடகுவைத்து, ரூ.7.56 கோடி மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர், நகைக் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிவகாசியில் உள்ள பொதுத்துறை வங்கியின் மண்டல மேலாளர் ரஞ்சித்(45). இவரது நிர்வாகத்தின் கீழ் நெல்லை, விருதுநகர், தென்காசி உட்பட6 மாவட்டங்களில், 46 கிளைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சிவகாசி கிளையில் ரஞ்சித் தணிக்கை மேற்கொண்டார். அதில் பல நகைக்கடன் கணக்குகள் நீண்டகாலமாக திருப்பப்படாமல் இருந்துள்ளன.

அந்த கணக்குகளில் உள்ள நகைகளை ஆய்வு செய்தபோது, அவை போலியான நகைகள் என்பது தெரியவந்தது. வங்கி வாடிக்கையாளரான நகைக் கடை உரிமையாளர் பாலசுந்தரம் என்பவர், தனக்குத் தெரிந்த 56 பேர் மூலம் 126 கணக்குகளைத் தொடங்கி, நகை மதிப்பீட்டாளர் முத்துமணி உதவியுடன் 15,427 கிராம் போலி நகைகளை அடகு வைத்து, ரூ.7.56 கோடி நகைக்கடன் பெற்றது தெரியவந்தது.

இதுகுறித்து மேலாளர் ரஞ்சித் அளித்த புகாரின்பேரில், நகை கடை உரிமையாளர் பாலசுந்தரம், நகை மதிப்பீட்டாளர் முத்துமணி ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x