சிபிஐ அதிகாரி பெயரில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பல்: வளசரவாக்கம் போலீஸார் விசாரணை

சிபிஐ அதிகாரி பெயரில் இளைஞரை மிரட்டி பணம் பறித்த கும்பல்: வளசரவாக்கம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

சென்னை: வளசரவாக்கம் அருகே உள்ள காரம்பாக்கம் தர்மராஜா நகர் விஸ்வநாதன் பிரதான தெருவைச் சேர்ந்தவர் பாரதி (36). இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னை சிபிஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து, ``போதைப் பொருள் கடத்துவதாக உங்கள் மீது புகார் வந்துள்ளது. உங்கள் வீட்டுக்கு போதைப் பொருள் பார்சல் சென்ற ஆதாரங்கள் இருக்கின்றன. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.25 ஆயிரம் தர வேண்டும்'' என்று அந்த நபர் கேட்டுள்ளார்.

இந்த மிரட்டலுக்குப் பயந்த பாரதி, அந்த நபர் கூறியபடி, தன்னிடமிருந்த ரூ.21,400-ஐ குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு தனக்கு மிரட்டல் விடுத்த செல்போன் எண் குறித்த விவரங்களைச் சேகரித்தார்.

அப்போதுதான், தன்னை மிரட்டியும், ஏமாற்றியும் பணத்தை அபகரித்திருப்பது சிபிஐ அதிகாரி இல்லை; வேறு நபர் எனத் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பாரதி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in