விழுப்புரத்தில் குழந்தைகள் கடத்தல் என வதந்தி - காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரத்தில் குழந்தைகள் கடத்தல் என வதந்தி - காவல் துறை எச்சரிக்கை
Updated on
1 min read

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், குழந்தைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் செல்வதாக வதந்தி பரவி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், குறிப்பிட்ட ஒரு கிராமத்தின் பெயரை குறிப்பிட்டு, பள்ளிக்குச் சென்ற 3 குழந்தைகளை அடையாளம் தெரியாத நபர்கள் அடுத்தடுத்து கடத்திச் சென்று விட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் மேலும் சில படங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

பெண் வேடமிட்ட ஆண் ஒருவர் இதைச் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இதனை அறிந்த சில பெற்றோர், பள்ளிக்குச் சென்று தங்களது குழந்தைகளை நாங்கள் வந்து அழைத்து செல்லும் வரை வெளியே அனுப்ப வேண்டாம் என்று கூறியிருக்கின்றனர். இதனால் வெகுசில பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளது.

இது குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரம் இல்லாத பொய் யான தகவல்களை பெற்றோர் நம்பத் தேவையில்லை. ஒரு சில கிராமங்களுக்கு போலீஸார் நேரடியாகச் சென்று, அப்பகுதி மக்களை சந்தித்து, இந்த வதந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுபோன்று பொய்யான தகவல்களை பரப்பும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in