சென்னை | மின்வாரிய பெண் அதிகாரியிடம் நகை பறித்து தப்பிய காவலரை தாக்கிய மக்கள் மீது வழக்குப் பதிவு

சென்னை | மின்வாரிய பெண் அதிகாரியிடம் நகை பறித்து தப்பிய காவலரை தாக்கிய மக்கள் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: மின் வாரிய பெண் அதிகாரியிடம் நகை பறித்து தப்பிய, வழிப்பறி காவலரைத் தாக்கிய பொதுமக்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பரங்கிமலை கன்டோண்மென்ட் போர்டில் வருவாய் கண்காணிப்பாளராக கமலக்கண்ணன் என்பவர் பணியாற்றுகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. கடந்த25-ம் தேதி இரவு உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அரும்பாக்கம் அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு செல்ல முயன்றனர்.

அப்போது, விஜயலட்சுமியின் நகையை பறித்துக் கொண்டு வழிப்பறி கொள்ளையன் ஒருவர் தப்பினார். அவரைப் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து தாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் பிடிபட்டது ஆவடி பட்டாலியனைச் சேர்ந்த காவலர் ராஜதுரை (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த ராஜதுரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சூளைமேடு காவல் நிலைய போலீஸார் கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in