Published : 25 Feb 2024 06:03 PM
Last Updated : 25 Feb 2024 06:03 PM

வீட்டிலிருந்தோரை கட்டிப்போட்டு 55 பவுன் நகைகள் கொள்ளை - ராஜபாளையத்தில் துணிகரம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்தவர்களை கட்டிப்போட்டு விட்டு 55 பவுன் நகைகள் மற்றும் ரூ.55 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.

ராஜபாளையம் வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரது மனைவி இந்துமதி (38). இவர்களுக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். முருகானந்தம் ராஜ பாளையம் ஜவகர் மைதான பகுதி யில் `ஹெல்த் சென்டர்' நடத்தி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு வடக்கு ஆண்டாள்புரத்தில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அனைவரையும் கட்டிப்போட்டனர்.

பின்னர், 55 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரத்தைக் கொள்ளை யடித்தனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துவிட்டு, செல்போன்களை யும் பறித்துத் தப்பினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஏடிஎஸ்பி.கள் சோமசுந்தரம், சூரியமூர்த்தி மற்றும் டிஎஸ்பி.கள் நாகராஜன், முகேஷ் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விருதுநகரிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்து, தடயங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x