Published : 24 Feb 2024 06:20 AM
Last Updated : 24 Feb 2024 06:20 AM
சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பணத்தை திருட முயன்ற உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொளத்தூர், ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த20-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கொளத்தூர், 200 அடி ரோடு,திருமலை நகர் பகுதியில் கண்காணித்தபோது, அங்குள்ள வங்கிஏடிஎம் மையத்தில் 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர்.
போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தபோது, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனுஜ் படேல்(21), வினய்குமார் (19) என்பதும், இவர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் பணத்திருட்டில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சில்வர் டேப் ஒட்டி... கைதான இருவரும் சென்னையில் பொக்லைன் வாகன ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். மேலும், அவர்கள் ஏடிஎம்இயந்திரத்தில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாதபடி சில்வர் டேப்பை பணம் வரும் இடத்தில்ஒட்டுவதும், வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முயற்சிக்கும்போது அவர்களது பணம் வெளியேவராமல் பாதியிலேயே நிற்பதும்,வாடிக்கையாளர்கள் சென்ற பின்னர் பணத்தை எடுத்து, நூதனமுறையில் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT