8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா மதபோதகர் கைது

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா மதபோதகர் கைது
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா மதபோதகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் லக்னோ மேற்கு பகுதியில் உள்ளமதரஸாவில், முகமது அபேதின்மற்றும் அவரது சகோதாரர் முகமது அர்ஷாத் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள் இருவரும் அங்கு பயிலும் 8 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து மதபோதகர் முகமது அபேதின் மற்றும் அவரதுசகோதரர் முகமது அர்ஷாத் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை (376டி), மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மதபோதகர் அபேதின் மற்றும் சிறுமியின் தாயை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான முகமது அர்ஷாத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in