

சென்னை: சென்னை திருமங்கலத்தில் பள்ளி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி முதல்வர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிபவர் பிரிட்டோ ( 52 ). இவர், அதே பள்ளியில் பணிபுரிந்த ஒரு இளம் ஆசிரியைக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஆசிரியை பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாராம்.
மேலும், இது தொடர்பாக அவர், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார், பிரிட்டோ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.