

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரயில்வே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், ரயில் ஓட்டு நர் சுதாரித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை கவிழ்க்க சதி நட ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குஜராத் காந்திதாமிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்ரயில் நேற்று முன்தினம் இரவு 9மணியளவில் நாகர்கோவிலை நெருங்கி வந்து கொண்டிருந்தது. பார்வதிபுரம்ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது,தண்டவாளத்தில் பெரிய பாறாங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ரயில்இன்ஜின் லோகோ பைலட் பார்த்துள் ளார். சுதாரித்துக் கொண்ட அவர், சாமர்த்தியமாக ரயிலின் வேகத்தை குறைத்தார். ஆனாலும் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி ரயில் நின்றது.
பலத்த சத்தம் கேட்டதால் ரயில் விபத்து நடந்ததாக நினைத்து, அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர்.ரயில்வேபோலீஸார் விசாரணை நடத்தினர். தண்டவாளத்தில் மாட்டின் எலும்பு கூடு, தலை, கொம்பு மற்றும் 6 பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. உடைந்தநிலையில் கிடந்த அவற்றை போலீஸார்அப்புறப்படுத்தினர். அதன்பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டு திருநெல்வேலி சென்றது.
ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அந்தப் பகுதியில் வீடுகளில் உள்ள கண்காட்சி கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயில் விபத்து நடந்த நேரத்தில் அங்கு மறைந்திருந்த சிலர், மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் காட்சி ஒரு கேமராவில் பதிவாகியிருந்தது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.