

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேயுள்ள சின்னகொக்கூர் பகுதியைச் சேர்ந்த சரவணன்(22) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(31), செந்தில்குமார்(33) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
2020 பிப்.16-ம் தேதி வீட்டிலிருந்த சரவணனிடம், ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும்ஆடுதுறையைச் சேர்ந்த சகோதரர்கள் சிவக்குமார்(37), ரஞ்சித்(34) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, ராமச்சந்திரன், செந்தில்குமார் ஆகியோர் கத்தியால் குத்தியதில் சரவணன் உயிரிழந்தார். இதுகுறித்து பாலையூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றம் சுமத்தப்பட்ட ராமச்சந்திரன், செந்தில்குமார், சிவக்குமார், ரஞ்சித் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி ராஜவேலு நேற்று உத்தரவிட்டார்.