

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கோத்தகிரி நீதிமன்றத்துக்கு 13 வயது சிறுமி கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரி டிஎஸ்பி சுந்தரேசன், கடந்த 2 நாட்களாக உதகையில் விசாரணை நடத்தினார். மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி, டிஎஸ்பி யசோதா, குழந்தைகள் நலக் குழும உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், கோத்தகிரி பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், குழந்தைகள் நல காப்பக நிர்வாகிகள் உள்ளிட்ட 15 பேரிடம் அவர் விசாரணை மேற்கொண்டார்.