தாக்குதலுக்கு ஆளான செய்தியாளர் நேசபிரபு
க்ரைம்
செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் @ திருப்பூர்
திருப்பூர்: தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் செய்தி நிறுவன செய்தியாளர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் செய்தியாளர் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு. நியூஸ்7 தமிழ் செய்தித் தொலைக்காட்சியின் பல்லடம் மற்றும் சூலூர் பகுதி செய்தியாளராக செயல்பட்டு வந்த நிலையில் அவர் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
