இறந்த தந்தை பெயரில் ஐடி ஊழியரிடம் நூதன மோசடி @ சென்னை

இறந்த தந்தை பெயரில் ஐடி ஊழியரிடம் நூதன மோசடி @ சென்னை
Updated on
1 min read

சென்னை: சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் புதிய ராஜா ( 23 ). ஐ.டி. ஊழியரான இவரது தந்தை உயிரிழந்த நிலையில், கடந்த டிசம்பர் 27 ம் தேதி, புதிய ராஜாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர், ‘உங்கள் தந்தை ஓராண்டுக்கு முன் எங்கள் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் காப்பீடு கட்டினார்.

ஆனால், இந்த ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.20,750 கட்டவில்லை. அதை கட்டினால் உங்களுக்கு 93 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பணத்தை ஆன்லைன் வாயிலாக புதிய ராஜா அனுப்பியுள்ளார்.

பின், விசாரித்த போது அந்த நிறுவனத்தில் தனது தந்தை காப்பீடு செய்யவில்லை எனத் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in