மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: திண்டிவனம் தனியார் பள்ளி முதல்வர் ‘போக்சோ’வில் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன்
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன்
Updated on
1 min read

விழுப்புரம்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த புகாரில், திண்டிவனம் அருகே தனியார் பள்ளி முதல்வர் கார்த்திகேயன் என்பவரை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வராக பணியாற்றியவர் கார்த்திகேயன் (31). இவர் கடந்த அக்டோபர் மாதம் முதல் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இன்று பள்ளியின் முதல்வர் கார்த்திகேயனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில அடைத்தனர். கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in