குன்றத்தூர் | ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையர் உட்பட 3 பேர் கைது

குன்றத்தூர் | ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி ஆணையர் உட்பட 3 பேர் கைது
Updated on
1 min read

குன்றத்தூர்: பெருங்குடியைச் சேர்ந்தவர் முனுசாமி. ஓய்வு பெற்ற காவல்ஆய்வாளரான இவருக்குச் சொந்தமான நிலம் மற்றும் இவரது உறவினர் நிலம் குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை வரன்முறை படுத்துவதற்காக குன்றத்தூர் நகராட்சிஅலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.

நிலம் வரன்முறை செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நிலவரன்முறைக்கு ரூ.36 ஆயிரம்லஞ்சமாகக் கேட்டுள்ளனர். பின்னர் ரூ.24 ஆயிரம் தருவதாக பேசி முடிக்கப்பட்டது.

ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத முனுசாமி காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புபோலீஸில் புகார் அளித்தார்.இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பிகலைச்செல்வன் உத்தரவின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் முனுசாமியிடம் கொடுத்தனுப்பப்பட்டன.

அந்த பணத்தை நகராட்சி அலுவலக உதவியாளர் சாம்சனிடம் முனுசாமி கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கைது செய்தனர்.

மேலும், ஆணையர் குமாரி, நகர அமைப்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் கூறியதன் பேரிலேயே லஞ்சப் பணத்தை வாங்கியதாக உதவியாளர் சாம்சன் கூறியதையடுத்து 3 பேரையும் போலீஸார்கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in