

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சைபர்க்ரைம் பிரிவு போலீஸார் நேற்று கூறியதாவது: அண்மைக்காலமாக `ஆதார் எனேபில் பேமென்ட் சிஸ்டம்' (ஏஇபிஎஸ்)மூலமாக பண மோசடி நடைபெற்று வருகிறது. ஆதார் கைரேகையை பயன்படுத்தி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக கடந்த மாதம் காரைக்காலில் 6 புகார்கள், புதுச்சேரியில் 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது காரைக்காலில் மேலும் 8 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வட மாநிலங்களில் இருந்தவாறு சிலர் இந்த குற்றச்செயலில் ஈடுபடுவது தெரிகிறது. இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க, வங்கிக் கணக்கு வைத்திருப்போர், மை ஆதார் போர்டல் வாயிலாக, ஆதார் கைரேகை மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் வசதியை நிறுத்தி வைத்துக்கொள்வது பாதுகாப்பானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.