முகநூலில் பிட்காயின் முதலீட்டு விளம்பரம்: இளம் பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி

முகநூலில் பிட்காயின் முதலீட்டு விளம்பரம்: இளம் பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி
Updated on
1 min read

தானே: பிட்காயின் முதலீட்டு விளம் பரத்தை நம்பி மகாராஷ்டிர இளம் பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பெல்ஜியம் நாட்டவர் என கூறி பிட்காயின் முதலீடு தொடர்பாக ஒருவர் முகநூலில் விளம்பரம் வெளியிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் தானே நகரை சேர்ந்த 33 வயது இளம் பெண் அவரை தொடர்பு கொண்டார். அப்போது, அந்த நபர் கூறியபடி இளம்பெண் இணையவங்கி மூலம் ரூ.50,000-த்தை செலுத்தினார்.அதன்பின் இந்திய மதிப்பில் ரூ.3 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக இணைய கணக்கில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து, மோசடி நபரிடம் பேசியபோது கணக்கை மேம்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போதுதான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தப் பெண் தற்போது புகார் அளித்துள்ளார். அதன்படி, பிட்காயின் முதலீட்டு விளம்பரத்தை நம்பி அந்தப் பெண் ரூ.26.88 லட்சத்தை பறிகொடுத்துள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் தொழிநுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந் துள்ள கபூர்பாவ்டி போலீஸார் மோசடி நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in