Published : 06 Jan 2024 06:35 AM
Last Updated : 06 Jan 2024 06:35 AM

ஆவடி | குடிசை மாற்றுவாரிய வீடுகள் வாங்கித் தருவதாக 104 பேரிடம் ரூ.88 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஆவடி: குடிசை மாற்று வாரிய வீடுகள் வாங்கித் தருவதாக கூறி, 104 பேரிடம் ரூ.88.40லட்சம் மோசடி செய்தது தொடர்பாக பெண் ஒருவரை நேற்று ஆவடி மத்தியகுற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். சென்னை, ராமாபுரம், அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் கவுதமன் (35). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமாபுரம், நாயுடு தெருவைச் சேர்ந்த சுப்ரமணியன், பூந்தமல்லி - குமணன்சாவடியைச் சேர்ந்த செல்வம், சென்னை,அம்பத்தூர்- கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த நித்யா, மணலி புதுநகரைச் சேர்ந்த லட்சுமி ஆகியோரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

அந்த அறிமுகத்தின் பேரில், செல்வம் உள்ளிட்ட 4 பேர், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே பணப்பாக்கம்கிராமத்தில் குடிசைமாற்று வாரிய வீடுகள் வாங்கித் தருவதாகவும், அதற்கு வாரியத்துக்கு முன்பணமாக ரூ.85 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கவுதமனிடம் கூறியுள்ளனர்.

இதனை நம்பி கவுதமன் மற்றும் 103 பேர் ரூ.88.40 லட்சம் பணத்தை லட்சுமிஉள்ளிட்ட 4 பேரிடம் அளித்துள்ளனர். தொடர்ந்து, அந்த 4 பேர், கவுதமன் உள்ளிட்ட 104 பேரிடம் புகைப்படம், கைரேகை மற்றும் கண்விழி அடையாளங்களை எடுத்துக் கொண்டு, வேனில் ஏற்றி பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை அடையாளம் காட்டி உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியதோடு, அரசு முத்திரையுடன் கூடிய போலியான ஒப்புகைச் சீட்டு கொடுத்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவுதமன் உள்ளிட்டோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி-மத்திய குற்றப்பிரிவின் போலிஆவணத் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்அடிப்படையில், சென்னை, மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த லட்சுமியை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x