Published : 06 Jan 2024 06:17 AM
Last Updated : 06 Jan 2024 06:17 AM
சென்னை: நுங்கம்பாக்கத்தில், மதுபோதையில் தகராறு செய்த கணவரை, சுவரில் இடித்து கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது: சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான காவலாளி: சென்னை, நுங்கம்பாக்கம், 2-வது தெரு, வைகுண்டபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (44). சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். பாலகிருஷ்ணனுக்கும், அவரது மனைவி கனக வள்ளிக்கும் (34) அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டுக்குவந்து மனைவியிடம் தகராறு செய்து அவரைத் தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கனகவள்ளி கணவரின் தலையைப் பிடித்து சுவரில் இடித்ததாகக் கூறப்படுகிறது. இத்தாக்கு தலில் பலத்த காயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலே இறந்துள்ளார்.
தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் போலீஸார் நிகழ்விடம் விரைந்து அவரது உடலை மீட்டுபிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகவழக்குப் பதிவு செய்த போலீஸார் கனகவள்ளியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT