

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று மனைவி உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, காரில் தப்பிச் சென்ற கணவர்விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞர் ஒருவரும் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரைச் சேர்ந்தவர் சுந்தர்கணேஷ்(42). தனியார்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்த இவர், கடந்த 2ஆண்டுகளுக்குமுன் வேலையில் இருந்து விலகிவிட்டார்.
இவரது மனைவி நித்யா(39), தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள வீட்டை விற்பது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே கடந்த 3 நாட்களாக தகராறு இருந்துள்ளது. அதேபோல, நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வீட்டிலிருந்த டிவி உள்ளிட்ட சாதனங்களை அடித்து சேதப்படுத்திய சுந்தர்கணேஷ், அரிவாளால் நித்யாவை வெட்டிவிட்டு, அங்கிருந்து காரில் ஏறிச் சென்றார். பின்னர், பரிசுத்தம் நகரில்பால் விற்பனை டெப்போ நடத்தி வரும் கீழத்திருப்பூந்துருத்தி தாமரைச்செல்வன்(35), மேலத்திருப்பூந்துருத்தி மு.கோபிநாத்(34) ஆகியோரையும் சுந்தர்கணேஷ் அரிவாளால் வெட்டிய பிறகு, காரில்திருச்சி நோக்கிச் சென்றுள்ளார்.
வழியில், செங்கிப்பட்டி அருகேமுத்தாண்டிப்பட்டி பகுதியில் சென்றபோது, திடீெரன கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பை தாண்டிச் சென்று எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த சுந்தர்கணேஷ், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
வெட்டுபட்டவர் உயிரிழப்பு: இதற்கிடையே, அரிவாள் வெட்டில் காயமடைந்த நித்யா தனியார்மருத்துவமனையிலும், தாமரைச்செல்வன், கோபிநாத் ஆகியோர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் கோபிநாத் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தெற்கு, செங்கிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக மனைவியை வெட்டிய சுந்தர் கணேஷ், மற்ற இருவரையும் வெட்டியது ஏன் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.