சென்னை | அசாம் மாநில இளைஞர் கொலை: நண்பர் கைது

சென்னை | அசாம் மாநில இளைஞர் கொலை: நண்பர் கைது
Updated on
1 min read

சென்னை: அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவருடன் தங்கி பணியாற்றிய நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிபுல் (20), சுகாலா (40). இருவரும் சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள பாண்டியன் சாலையில் வசித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள இறைச்சி கடையில் ஒன்றாக வேலை செய்தனர்.

இந்நிலையில், இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கி இருந்த அறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், ஆத்திரம் அடைந்த சுகாலா, கோழி அறுக்கும் கத்தியால் சிபுலின் கழுத்தை அறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த சிபுலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்கு பதிந்து சுகாலாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in