Published : 10 Dec 2023 04:04 AM
Last Updated : 10 Dec 2023 04:04 AM
திருவள்ளூர்: இளம் பெண்ணுக்கு ஆபாச புகைப் படங்களை அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையர் சங்கரிடம், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில், தான் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகவும், தனது அந்தரங்க புகைப் படங்களை ஒருவர் தனக்கு பல மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக, ஆவடி காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இளம் பெண்ணுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது முகமது சுல்தான் என்பதும், அவர் கோவூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸார் முகமது சுல்தானை கைது செய்து பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT