போலி டோல் கேட் அமைத்து குஜராத் நெடுஞ்சாலையில் ஒன்றரை ஆண்டாக பணம் வசூல்

போலி டோல் கேட் அமைத்து குஜராத் நெடுஞ்சாலையில் ஒன்றரை ஆண்டாக பணம் வசூல்
Updated on
1 min read

மோர்பி: குஜராத்தின் மார்பி மாவட்டத்தின் பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் வர்காசியா என்ற இடத்தில் அரசு டோல் கேட் உள்ளது. இதன் அருகே ஒயிட் ஹவுஸ் என்ற மூடப்பட்ட செராமிக் ஆலை உள்ளது. இதன் காலி இடத்தில் பை-பாஸ் வழி ஏற்படுத்தி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வகாசியா டோல் கேட்டுக்கு செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டு, போலி டோலிகேட்டில் பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தடத்தில் வழக்கமாக செல்லும் ஓட்டுநர்கள் போலி டோல் கேட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இப்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒரு கும்பல் டோலி டோல் கேட் மூலம் அரசுக்கு தெரியாமல் கட்டண வசூலில் ஈடுப்பட்டுள்ளது.

இதுகுறித்து வர்காசியா டோல் கேட் மேலாளர், அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி ஒயிட் ஹவுஸ் செராமிக் நிறுவன உரிமையாளர் அமர்ஷி படேல் மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in