ஆஃப்பாயில் உடைந்ததால் தகராறு: இந்து முன்னணி பிரமுகர்கள் உட்பட 10 பேர் மீது வழக்கு @ காங்கயம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

திருப்பூர்: காங்கயத்தில் சாப்பிடும் முன்பே ஆஃப்பாயில் உடைந்ததால், தள்ளுவண்டி கடைக்காரரின் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்குதல் நடத்திய இந்து முன்னணி பிரமுகர்கள் உட்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காங்கயம் திருப்பூர் சாலை காமராஜர் நகரை சேர்ந்தவர் சவுந்திராராஜன். இவரது மனைவி கீதா (32). தம்பதியர் திருப்பூர் சாலை சிவசக்தி விநாயகர் கோயில் அருகே தள்ளுவண்டியில் உணவகம் நடத்தி வந்தனர். தம்பதியர் நடத்தி வந்த கடையில், காங்கயம் இந்து முன்ணணி நகர செயலாளர் நாகராஜ் கடந்த 10 நாட்களுக்கு முன்பே கடையில் ஆஃப்பாயில் சாப்பிட சென்றுள்ளார். அப்போது சாப்பிடும் முன்பே ஆஃப்பாயில் உடைந்து போனதால் காசு கொடுக்காததில் பிரச்சினை எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்து முன்ணணி மாவட்ட பொது செயலாளர் சதீஸ் தலைமையில் நாகராஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இந்து முன்ணணி அமைப்பினர் கடைக்கு வந்தனர்.

சவுந்திரராஜன் மனைவி கீதாவிடம் கோயிலுக்கு அருகே முட்டை சமைத்து விற்கக்கூடாது என எச்சரித்தனர். அதற்கு தம்பதியர், நாங்களும் செல்லும் கோயில் தான். எங்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது என அந்த கும்பலிடம் தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திமடைந்த கும்பல், திட்டியபடியே அவரை தாக்கி உள்ளனர். இதைப் பார்த்து சவுந்திரராஜன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்ததால் இந்து முன்ணணியினர் அங்கிருந்து தப்பி ஒடினர்.

பின்னர் இந்த தகராறில் காயமடைந்த கீதாவை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து கீதா அளித்த புகாரின் பேரில் சதீஸ் (45), நாகராஜ் (35) உள்ளிட்டோர் மீது பெண் வன்கொடுமை வழக்கில் காங்கயம் போலீஸார் வழக்கு பதிந்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in