கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தல்: தேடுதல் பணியில் போலீஸார்

கேரளாவில் 6 வயது சிறுமி கடத்தல்: தேடுதல் பணியில் போலீஸார்

Published on

கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் 6 வயது சிறுமி இன்று (நவ.27) மாலை கடத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது தாயாரை தொலைபேசிக்கு வந்த அழைப்பில் ரூ.5 லட்சம் கொடுத்தால் சிறுமி பத்திரமாக வீடு திரும்புவார் என மறுமுனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் சிறுமியை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, தந்து 8 வயது சகோதரருடன் டியூஷனுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது காரில் வந்த சிலர் அவரை கடத்தி சென்றுள்ளனர். கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒய்யூர் (Oyoor) பகுதியில் இது நடந்துள்ளது. மாலை 4.45 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காவல் துறையில் இந்த சம்பவம் குறித்து புகார் தெரிவித்த நிலையில் மாநிலம் தழுவிய அளவில் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடத்தலில் மொத்தம் 4 பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் பெண் என தெரிகிறது. இந்த தகவலை சிறுமி கடத்தப்பட்ட போது அவருடன் இருந்த அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பத்திரமாக மீட்க போலீஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in