Published : 21 Nov 2023 07:00 AM
Last Updated : 21 Nov 2023 07:00 AM

நிதி நிறுவன மோசடி வழக்கு | சுபிக்க்ஷா சுப்ரமணியனுக்கு 20 ஆண்டு சிறை: சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட சுபிக்க்ஷா சுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அடையாறு காந்தி நகரில் விஸ்வபிரியா என்ற நிதிநிறுவனம், முதலீடுகளுக்கு அதிகவட்டி தருவதாகக் கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்தது. ஆனால், சொன்னபடி தொகையை திருப்பி வழங்காமல் மோசடி செய்தது.

இதுதொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2013-ல் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன்துணை நிறுவனங்களான அக்‌ஷய பூமி இன்வெஸ்ட்மெண்ட் பிரை வேட் லிமிடெட் என 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்களாக செயல்பட்ட சுபிக்‌ஷாசுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்ளிட்ட 17 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீஸார் கடந்த 2020-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையை சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அதில், 587 முதலீட்டாளர்கள் அளித்துள்ள புகார்களின்படி ரூ.47.68 கோடிக்கு மேல் பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது நிறுவன இயக்குநர்களான நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் இறந்துவிட்டனர். தலைமறைவான இயக்குநர் அப்பாதுரையை, தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது. அரசு தரப்பி்ல் வழக்கறிஞர்கள் டி.பாபு, எம்.இ.வி.துளசி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கருணாநிதி,‘‘வழக்கில் குற்றம் சாட்டப்பட்டநிதி நிறுவன இயக்குநர்களில் ஒருவரான சுபிக்க்ஷா சுப்ரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

ரூ.191.98 கோடி அபராதம்: மற்றொரு இயக்குநரான ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு தலா 10ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தமாக ரூ. 191.98 கோடி அபராதம் விதிக்கப்படு கிறது. இந்த தொகையில் ரூ.180கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும்’’ என தீர்ப்பளித்துள்ளார். இயக்குநர்களான ராகவன், மோகன் ராமசாமி ஆகியோரை நீதிபதி விடுதலை செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x