சென்னை | தனியார் மென்பொருள் நிறுவனத்தின் தரவுகளை திருடிய 5 ஊழியர்கள் கைது

தரவுகளைத் திருடியதாக கைது செய்ய ப்பட்ட எடிசன் , ராம்குமார், காவ்யா
வசந்த கிருஷ்ணன் , ரவிதா தேவசேனாபதி, கருப்பையா
தரவுகளைத் திருடியதாக கைது செய்ய ப்பட்ட எடிசன் , ராம்குமார், காவ்யா வசந்த கிருஷ்ணன் , ரவிதா தேவசேனாபதி, கருப்பையா
Updated on
1 min read

சென்னை: தனியார் நிறுவனத்தின் தரவுகளை ‘ஹேக்’ செய்து திருடிய அந்நிறுவனத்தின் ஊழியர்கள் 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவனத்தின் நிதி மேலாளர், மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘தங்களுடைய நிறுவனத்தில் மென்பொருட்கள் தயாரித்து, வங்கி நிறுவனங்களுக்கு வழங்கும்பணியை மேற்கொள்வதாகவும், இதில் தங்களது வாடிக்கையாளர்களின் அமேசான் வெப் சர்வீஸ் மென்பொருள் கணக்கை ஹேக் செய்து, அதில் உள்ள தரவுகள் திருடப்படுவதாகவும், எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என் றும் புகார் அளித்திருந்தார்.

செல்போன், லேப்டாப் பறிமுதல்: இதையடுத்து, மென்பொருளை ஹேக் செய்த ஐபி முகவரியை வைத்து, சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, அந்நிறுவனத்தின் ஊழியர்களான நீலாங்கரையைச் சேர்ந்த எடிசன்(29), ராம்குமார்(29), ஆதம்பாக்கத்தை சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன்(29), கர்நாடகாவை சேர்ந்த ரவிதாதேவசேனாபதி (40), புதுக்கோட்டை மாவட்டத்தைச்சேர்ந்த கருப்பையா(26) என்பது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 7 லேப்டாப், ஒரு ஐபேடு, 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in