Published : 16 Nov 2023 05:31 AM
Last Updated : 16 Nov 2023 05:31 AM

திருமங்கலம் உணவகத்தில் ஒடிசா இளைஞர் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது: சம்பவம் குறித்து காவல் இணை ஆணையர் விளக்கம்

சென்னை: திருமங்கலம் உணவகத்தில் ஒடிசாஇளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். இதன் பின்னணி குறித்து காவல் இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (30). இவர், அண்ணாநகர், 2-வது அவென்யூவில், ‘கோரா புட்ஸ்’ உணவக வளாகத்தில், காமதேனு ரோஸ் மில்க் என்றபெயரில் கடை நடத்தி வருகிறார். கடந்த, 12-ம் தேதி இரவு, இளைஞர்கள் சிலர், கணேஷ் கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், பணம் கேட்டு மிரட்டி தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக 3 பேரை திருமங்கலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் மனோகர், நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

கணேஷ், கடந்த நான்கு ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் அருகில், ஐஸ்கிரீம் கடை ஒன்றில், கொரட்டூரைச் சேர்ந்த ஜெட்சன் (22) என்பவர்பணியாற்றி, நான்கு மாதங் களுக்கு முன் வேலையை விட்டுநின்றுள்ளார். ஜெட்சன், தீபாவளி யன்று இரவு 9 மணிக்கு மதுபோதையில் அங்குள்ள உணவகத் தில் பிரியாணி ‘ஆர்டர்’ செய்து காத்திருந்துள்ளார்.

அப்போது, கணேஷ் கடையில் பணியாற்றும் தேவராஜூடம் அவர்வீண் தகராறு செய்து தாக்கி உள்ளார். இதை கணேஷ் தட்டிக்கேட்டதால், ஜெட்சன் தனது நண்பர்களுடன் சேர்த்து, மது போதையில் கணேஷை தாக்கி உள்ளார்.

கணேஷ், தாமதமாக, 13-ம் தேதி இரவு புகார் அளித்தார். தனிப்படை போலீஸார் ஜெட்சன், அவரது நண்பர்களான கொரட்டூரைச் சேர்ந்த சசிகுமார் (22), தென்றல் குமார் (22) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்களுக்குள் எந்த முன் பகையும் இல்லை. 3 பேர் மீது ஏற்கெனவே எந்த வழக்கும் இல்லை. இணையதளத்தில் பரவுவது போல் இவர்கள் ரவுடிகளும் கிடையாது.

அதேபோல், கடையில் மாமூல் கேட்டு அடித்ததாகக் கூறுவது தவறான தகவல். சம்பவத்தில் ஈடுபட்டமற்ற 5 பேரை தேடி வருகிறோம். அண்ணா நகர் 2-வது அவென்யூ வில், 20 கேமராக்கள் உள்ளன. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x