

கோவை: கோவை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த பெட்டிகளில், சிங்கப்பூரில் இருந்துகடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்பு, சிலந்தி வகைகள், ஆமைக் குஞ்சுகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக இரு பயணிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கோவை விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானம், மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 3 பெட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவற்றில், சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்பு, ஆமைக் குஞ்சுகள், சிலந்திஉள்ளிட்ட உயிரனங்கள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடத்தில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தெரியவந்தது. கடத்தலில் தொடர்புடைய டோமனிக், ராமசாமி ஆகியோரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு உயிரினங்கள் என்பதால், அவற்றை மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பிவைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்திவரும் அதிகாரிகள், விசாரணைக்குஆஜராகாத மற்றொரு நபரை அழைத்துவரத் தேவையானநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.