

சென்னை: சென்னை கொத்தவால் சாவடியில் ஆதியப்பா - கோவிந்தப்பா தெரு சந்திப்பில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. நேற்று காலை8.45 மணியளவில் கோயிலுக்குள் நுழைந்த நபர் ஒருவர், தான் கொண்டு வந்த பெட்ரோல் குண்டைசாமி சிலையை நோக்கி வீசினார். அப்போது, அது வெடித்து சிதறியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தஅர்ச்சகர், பக்தர்கள் கோயிலுக்குள்இருந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள்பெட்ரோல் குண்டு வீசியவரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார்,அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியவர், சென்னை பிராட்வே, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன்(39) என்பது தெரியவந்தது. மேலும், அவர் போலீஸாரிடம் கூறும்போது, ``கடந்த 4 ஆண்டுகளாக இந்த கோயிலுக்கு தினமும்வந்து வழிபடுகிறேன். ஆனால், நான் நினைத்தது, வேண்டியது இதுவரை நடக்கவில்லை. சாமிஎனக்கு எதுவும் செய்யவில்லை. அந்த கோபத்திலும், விரக்தியிலும்தான் பெட்ரோல் குண்டு வீசினேன்’’என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``முதல்கட்ட விசாரணையில் முரளி கிருஷ்ணன்அதிகமான மதுபோதை காரணமாக தெளிவற்ற மன நிலையில் இருந்ததால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது'' என்றனர். கோயிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய முரளிகிருஷ்ணன் அப்பகுதியில் முந்திரி, உலர் பழங்கள்விற்கும் கடை நடத்தி வந்துள்ளார். இவர் மீது ஏற்கெனவே சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க முரளிகிருஷ்ணன் டீக்கடையினுள் நாற்காலியில் அமர்ந்து சாவகாசமாக பெட்ரோல் குண்டு தயார் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
அண்ணாமலை கண்டனம்: கோயிலுக்குள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவத்துக்கு தமிழக பாஜகதலைவர் அண்ணாமலை கண்டனம்தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் உள்ள பாஜக அலுவலகம், ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் தொடர்ச்சியாக தற்போது கோயிலுக்குள் பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்குஅதள பாதாளத்துக்குப் போய்விட்டது. போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித்திரியும் பிரிவினைவாத அமைப்புகளைக் கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோயிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும்அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு என்றார்.