திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் உயிரிழப்பு

ஹேமலதா (கோப்புப்படம்)
ஹேமலதா (கோப்புப்படம்)
Updated on
1 min read

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ் (29). இவருக்கும், திருப்பத்தூர் அடுத்த எலவம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதுவின் மகள் ஹேமலதா (24) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பினியான ஹேமலதாவுக்கு நேற்று பிரசவ வலி அதிகமானது. உடனே, அவரது குடும்பத்தினர் கொரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்காக ஹேமலதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இது பிரசவ வலி, குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. ஆனால், ஹேமலதாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து, ஹேமலதாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதில், அவரின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்ததால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமலதா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in