

ஸ்ரீவில்லிபுத்தூர்: ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தொடர் திருட்டில் ஈடுபட்டுவரும் நபர் குறித்து தகவல் கிடைத்தால் போலீஸாருக்கு தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராஜபாளையத்தில் கடந்த பிப்ரவரியில் 4 வீடுகளிலும், மே மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் 6 வீடுகளிலும், அதன்பின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் சாய் பாபா காலனி மற்றும் சிங்கா நல்லூர் பகுதியிலும்,
அக்டோபரில் உசிலம்பட்டி, ராஜபாளையத்திலும், கடந்த 2-ம் தேதி மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் இரவு நேரத்தில் தனி ஆளாக முகமூடி அணிந்து ஒருவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார். இவர் அனைத்து இடங்களிலும் ஒரே ஆடையை அணிந்து வந்து திருட்டில் ஈடுபடுகிறார்.
இந்நபர் குறித்து தகவல் தெரிந்தால் ஆகிய 94981 84850, 94981 84540 மொபைல் போன் எண்களில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம், என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.