

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் ஸ்ரீராம் நகர் மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ராம்தாஸ். இவரது மகன் ஜெகதீஷ் குமார் (38) சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
ராம்தாஸ் தனது மனைவி உடன் மகனைப் பார்ப்பதற்காக அக். 17-ம் தேதி சென்னை சென்றார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் ராம்தாஸுக்கு தகவல் அளித்தனர்.
கிருஷ்ணன் கோவில் போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு மற்றும் அறையில் 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு 102 பவுன் நகைகள், ரூ. 8 லட்சம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசபெருமாள் வீட்டை பார்வையிட்டார். கிருஷ்ணன் கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.