Published : 02 Nov 2023 06:20 AM
Last Updated : 02 Nov 2023 06:20 AM
கடலூர்: சென்னை திமுக பிரமுகர் மகன் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை திருவொற்றியூர் விம்கோ நகரைச் சேர்ந்தவர் விவேகானந்தன். திமுக பிரமுகர். இவரது மகன் காமராஜ் (35). இவர்கள் இருவரும் மாநகராட்சி பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி காமராஜ் அவரது அலுவலகத்தில் இருந்தபோது, மோட்டார்சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல்அவரை சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்தவர் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சென்னை எழும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
15 நாள் சிறை: இந்த நிலையில் நேற்று காலை கடலூர் நீதித்துறை நடுவர் மன்றம் எண் 3-ல் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னைஎண்ணூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (25), இளந்தமிழன் (23), தினேஷ் (31), மனோ என்கிறமணவாளன் (29), காந்தி (23) மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கவுண்டர்பாளையம் ஜமாலுதின் (31) ஆகிய 6 பேர் சரணடைந்தனர்.
நீதித்துறை நடுவர் ரகோத்தமன் 6 பேரையும் சென்னை புழல் சிறையில் 15 நாட்கள் அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சென்னை புழல் சிறைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT