

சாத்தூர்: ராஜபாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு காரை சாத்தூரில் போலீஸார் மடக்கிப் பிடித்து 600 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.
தேவர் ஜெயந்தியையொட்டி ராஜபாளையம் அன்னப்ப ராஜா பள்ளி அருகே காவல் சோதனைச் சாவடியில் வடக்கு காவல் நிலைய எஸ்ஐ கவுதம் விஜி தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட சொகுசு கார், கவுதம் விஜி மீது இடித்து விட்டு வேகமாகச் சென்றது. சந்தேகம் அடைந்த போலீஸார் அந்த சொகுசு காரை பின் தொடர்ந்து சென்று சாத்தூரில் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது காரில் 600 கிலோ எடையுள்ள ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது. காரை இயக்கிய ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது அஸ்லாம், அவருடனிருந்த சதன் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். குட்கா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு கார், 3 மொபைல் போன்களை போலீஸார் பறிமுதல்