

தஞ்சாவூர்: பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது, பட்டா கத்தியால் கேக்வெட்டிய இந்து எழுச்சிப் பேரவைநிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகேயுள்ள மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சாய் ரகு(39). இந்து எழுச்சிப் பேரவையின் தஞ்சாவூர் மாநகர் மாவட்டத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், கடந்த 24-ம்தேதி கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள், நண்பர்கள் ஆகியோருடன் சாய் ரகு பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது, கட்சி நிர்வாகிகள் வழங்கிய பட்டா கத்தியால், கட்சி அலுவலகத்துக்கு வெளியே, சாலையில் பிறந்த நாள் கேக் வெட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, தஞ்சாவூர் தாலுகா போலீஸார், சாய் ரகு மீது ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.