Published : 27 Oct 2023 05:17 AM
Last Updated : 27 Oct 2023 05:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் தோரிப்பள்ளி அருகேயுள்ளஉங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்வெங்கட்ராமப்பா (52). இவரது மனைவி மீனாட்சி(47), மகன் கிரி (23), மகள் காவ்யா (18).
கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி சூளகிரி அருகே நடந்த விபத்தில் சிக்கிய கிரி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செப். 7-ம்உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த நிலையில் இருந்த மீனாட்சி மற்றும் காவ்யா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்து வந்த சூளகிரி போலீஸார் இருவரது உடல்களையும் மீட்க முயன்றனர். அதற்குமீனாட்சியின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கிரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மீனாட்சியும், காவ்யாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், விபத்து நேரிட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவைக் காண்பிக்குமாறு கூறியும்,அதைக் காட்டவில்லை. இதனால்தான் மீனாட்சி, காவ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, டிஎஸ்பி பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, கிரி வழக்கில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, உறவினர்கள் சமாதானமடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், தற்கொலைக்கு முன்னர் காவ்யா எழுதிய 2 பக்க கடிதத்தைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT