Published : 25 Oct 2023 06:45 AM
Last Updated : 25 Oct 2023 06:45 AM
பள்ளிக்கரணை: சென்னை பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் மதனகோபால் (எ) பல்லு மதன்(44), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் பாஜகவில் சேர்ந்து சென்னை கிழக்கு மாவட்ட பட்டியல் அணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் அவரது வீட்டுக்கு வந்த 15-க்கும் மேற்பட்டோர் பல்லு மதனை கொலை செய்வதற்காக தேடியபோது வீட்டில் இல்லாததால் அவரது மனைவியை தள்ளிவிட்டு விட்டு, உன் கணவனை கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்து மண்ணெண்ணெய் குண்டை வீட்டின் வாசலில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். பயங்கர சத்தத்துடன் மண்ணெண்ணெய் குண்டு வெடித்ததை கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற மதனகோபால் தலைமையிலான போலீஸார், பல்லு மதனின் மனைவியிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT