

தென்காசி: குற்றாலம் ராமாலயம் பகுதியைச் சேர்ந்தவர் கிரந்தர் சக்கரவர்த்தி (53). மருத்துவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார்.
அப்போது, இவரது வீட்டில் 105 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. குற்றாலம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று குற்றாலம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக நபர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வீரவ நல்லூரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (33),
மேலப்புதுக் குடியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் (36), கன்னியாகுமரி மாவட்டம் அழகர் பாறையைச் சேர்ந்த வேல் முருகன் (36) என்பதும், இவர்கள் கிரந்தர் சக்கர வர்த்தி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸார் கைது செய்து, 75 கிராம் தங்க நகைகளை மீட்டனர். மேலும், திருட்டுக்கு பயன்படுத்திய கார் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.