Published : 16 Oct 2023 04:08 AM
Last Updated : 16 Oct 2023 04:08 AM
திருப்பத்தூர்: கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண் டறிந்து கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த குற்றத்தில் காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த திருப்பத்தூர் ஸ்கேன் சென்டர் சுகுமாரை கூட்டாளிகள் 3 பேருடன் சேர்த்து தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் சாமநகர், ரயில்வே நிலையம் சாலையைச் சேர்ந்தவர் சுகுமார் (50). இவர் திருப்பத்தூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்தார். இந்த ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டறிந்து, அந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கருக்கலைப்பும் செய்து வந்துள்ளார்.
கருக்கலைப்பு செய்ய வரும் பெண்களிடம் ரூ.25 ஆயிரத்தில் தொடங்கி ரூ.50 ஆயிரம் வரை பணத்தை வசூலித்து வந் துள்ளார். இவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுகாதாரத்துறையினர் இவரது ஸ்கேன் சென்டரில் நடத்திய ஆய்வில் குற்றச்சாட்டு ஊர்ஜித மானதால் சுகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் இடத்தை மட்டும் மாற்றிக்கொண்டு தன் தொழிலை மாற்றாமல் கருக்கலைப்பு தொழிலை தொடர்ந்து நடத்தி வந்தார் சுகுமார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி கருக் கலைப்பு செய்த விவகாரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. அவரிடம் நடத்தப் பட்ட விசாரணையில், திருப்பத்தூரில் ஒரு வீட்டில் கருக் கலைப்பு செய்தது தெரியவந்தது.
அதற்கு உடந்தையாக இருந்த காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த இடைத்தரகர் உமாராணி என்ப வரை காவல் துறையினர் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருப்பத்தூரைச் சேர்ந்த இடைத்தரகர் சங்கர் என்பவர், திருப்பத்தூரில் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்த சுகுமார் மூலம் கிருஷ்ணகிரி மட்டும் அல்லாமல் தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்வது தெரியவந்தது.
மேலும், திருப்பத்தூர் மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் சுகுமார் ஸ்கேன் சென்டர் தொடங்கி அங்கேயும் தன் தொழிலை விரிவுப் படுத்தி வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர்கள் பாஸ்கர பாண் டியன் (திருப்பத்தூர்), சரயு (கிருஷ்ணகிரி) ஆகியோர் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறையினர் திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியில் சோதனை நடத்திய போது அங்குள்ள ஒரு குடிசை வீட்டில் 5-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கருக் கலைப்பு செய்ய காத்திருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
இதையறிந்த ஸ்கேன் சென்டர் சுகுமார் தன் கூட்டாளிகளுடன் தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் உத்தரவின்பேரில், தீவிர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு தலைமறைவான சுகுமாரை தேடும் பணி தொடங்கியது.
முதல் கட்டமாக இடைத்தரகர் சங்கர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் அருகேயுள்ள ஒரு வீட்டில் சுகுமார் தன் கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில், தனிப்படை காவல் துறையினர் நேற்று மாலை அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பதுங்கியிருந்த சுகுமார்,
அவரது கூட்டாளிகளான இடைத் தரகர்கள் வேடி, விஜய் மற்றும் சிவா என மொத்தம் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்பு வழக்கில் ஏற்கெனவே, 5 முறைக்கு மேல் கைது செய்யப்பட்டுள்ள சுகுமார் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல நூறு பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளதால் அவர் மீது கடும் சட்ட நடவடிக் கைகளை எடுக்க வேண்டும், ஜாமீனில் வெளியே வர முடியாதபடி அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT