கமிஷன் தொகை விவகாரத்தில் காப்பீட்டு நிறுவன உதவி மேலாளரை கடத்திய 3 பேர் கைது

கமிஷன் தொகை விவகாரத்தில் காப்பீட்டு நிறுவன உதவி மேலாளரை கடத்திய 3 பேர் கைது
Updated on
1 min read

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு லட்சுமி விலாஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருவான்மியூரில் செயல்படும் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரை பார்ப்பதற்காக வந்த 3 பேர் அலுவலகத்தின் வெளியில் அழைத்து சென்று அவரை காரில்ஏற்றி கடத்தினர். பின்னர் கடத்தப்பட்ட ஆனந்தின் மனைவி புவனேஸ்வரியை போனில் தொடர்பு கொண்டு, ‘உன் கணவர் எங்களுக்கு சேர வேண்டிய ரூ.2.50 லட்சத்தை உடனடியாக தர வேண்டும்.இல்லை என்றால் அவரைக் கொலை செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசிவிடு வோம்’ என மிரட்டியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி, கணவர்கடத்தப்பட்டது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார்அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக ஆனந்தின் செல்போன் சிக்னலை பின் தொடர்ந்தபோது, அவர் கோவிலம்பாக்கம் அருகே கடத்தி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸார் ஆனந்தை பத்திரமாக மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்டதாக அவருடன் பணியாற்றிய பார்த்திபன், நடராஜ், கோதண்டராமன் ஆகியோரைக் கைது செய்தனர். விசாரணையில் புதிய வாடிக்கையாளர் களை சேர்த்ததற்கு கமிஷனாக 3 பேருக்கும் கொடுக்க வேண்டிய பணம் ரூ.2.50 லட்சத்தை ஆனந்த் கொடுக்கவில்லை. இதைக் கேட்டு கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in