

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39). இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை வழக்கு ஒன்றில் பொம்மிடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். ரவி சிறுநீரக பிரச்சினையால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், திடீரென சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரவி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.