திருப்பூர் அருகே வடமாநில இளம்பெண் கொலை: பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை

திருப்பூர் அருகே வடமாநில இளம்பெண் கொலை: பெருமாநல்லூர் போலீஸார் விசாரணை

Published on

திருப்பூர்: வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் அடுத்த ஈட்டி வீரம்பாளையம் ராக்கியாப்பட்டி சுடுகாடு பகுதியில் பெண்ணின் சடலம் கிடந்தது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் பெருமா நல்லூர் போலீஸார் அங்கு வந்து, சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘சடலமாக கிடந்த பெண், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு 30 முதல் 35 வயது இருக்கலாம். கழுத்தை நெரித்து அப்பெணெ் கொலை செய்யப்பட்டிருக்கலாம். கல்லால் தாக்கி மூக்கு, பற்களை மர்ம நபர்கள் சேதப் படுத்தியுள்ளனர். அந்த பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in