

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தபரமசிவம் மனைவி ராணி. இவரதுசெல்போன் எண்ணுக்கு திருச்சிவிமான நிலையத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது மகனின்வேலைக்காக, அதில் உள்ளஎண்ணை தொடர்புகொண்டு ராணி பேசியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி, ரூ.16,61,038 பெற்றுள்ளனர். ஆனாலும், ராணியின் மகனுக்குவேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராணி, தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் புகார் செய்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில்தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவுபோலீஸார் விசாரணை நடத்தினர்.இதில், ராணியிடம் மோசடி செய்தவர் டெல்லி ஜமீயாநகரைச் சேர்ந்தமொஹத் காலிக்கான் மகன் மொஹத் அபு ஷார்கான் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் டெல்லி சென்று மொஹத் அபுஷார்கானை கடந்த 17-ம் தேதி கைதுசெய்தனர். அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர்,தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தூத்துக்குடி 4-வது நீதித்துறை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் அடைத்தனர்.