வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

வடமாநில பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் உட்பட 5 பேர் கைது

Published on

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள செங்கல்சூளையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 30 வயது பெண் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும், கீழப்பசலையைச் சேர்ந்த ஆதித்யா (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து கீழமேல்குடி அருகேயுள்ள தெக்கூரைச் சேர்ந்த தனது நண்பர்கள் ரஞ்சித் (21), கஜேந்திரன் (19), அருண்குமார் (22) மற்றும் 16 வயது சிறுவனிடம் ஆதித்யா தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ஒடிசா பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்பேரில் மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. தலைமறைவாக இருந்த ஆதித்யா, ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார் மற்றும் சிறுவனை போலீஸார் கைது செய்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in