Published : 16 Sep 2023 06:10 AM
Last Updated : 16 Sep 2023 06:10 AM

சென்னை | போதைப் பொருள் கடத்தல், விற்பனை தமிழகம் முழுவதும் 15 நாளில் 336 பேர் கைது

சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகபோலீஸார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையொட்டி, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கடந்த 11-ம் தேதி வரைதமிழகம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 13 பெண்கள் உட்பட 336 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, அவர்களிடமிருந்து ரூ.1.18 கோடி மதிப்புள்ள 1,184 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிஜிபி சங்கர் ஜிவால் கூறும்போது, போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடும்நபர்கள் குறித்த தகவலை 10581 மற்றும், 94984 10581 என்ற எண்களிலும் spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x